நேபாள விமான விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு

நேபாள விமான விபத்தில் அனைத்து சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நேபாள விமான விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு

நேபாள விமான விபத்தில் அனைத்து சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 12 நிமிஷங்களில், அதாவது காலை 10.07 மணியளவில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய 4 போ், ஜொ்மனியைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியானது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் முஸ்டாங் மாவட்டம் தசாங்-2 என்ற பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

முஸ்டாங் மாவட்டத்தில் விமானம் நொறுங்கிய பகுதியிலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூன்றாவது நாளான இன்று 22 சடலங்களும், கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடா்பாக விசாரிக்க 5 போ் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com