டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

'மீன் பிடித்து சமைத்து சாப்பிடலாம்' - ஜப்பானில் ஒரு வினோத ஹோட்டல்! (வைரல் விடியோ)

ஜப்பானில் ஒரு வினோத ஹோட்டல் உள்ளது. இங்கு நீங்களே சமைத்து  சாப்பிடலாம். இதற்காக தேவைப்படும் சமையல் பொருள்களையும் நீங்களே தேர்வு செய்யலாம்.

Published On :

வழக்கமாக உணவகங்களுக்குச் சென்றால் என்ன செய்வோம்? உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். குறிப்பாக, வீட்டில் சமைக்கவில்லை என்றால்தான் ஹோட்டலுக்குச் செல்வோம் 

ஆனால், ஜப்பானில் ஒரு வினோத ஹோட்டல் உள்ளது. இங்கு நீங்களே சமைத்து  சாப்பிடலாம். இதற்காக தேவைப்படும் சமையல் பொருள்களையும் நீங்களே தேர்வு செய்யலாம்.

இங்கு மீன் சமைக்க விரும்பினால் அங்குள்ள குளத்தில் நீங்களே மீன் பிடித்து சமைக்கலாம் அல்லது உங்களுங்குப் பிடித்தவாறு வழிமுறைகளை கூறி சமையல்காரர் கொண்டு சமைக்கலாம். 

மேலும், இதுபோன்று சைவம், அசைவம் என பல உணவுகளைத் தயார் செய்வதற்கான காய்கறிகள், மசாலா பொருள்கள் என சமையலுக்குத் தேவையான மூலப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எது தேவையோ எடுத்து சமைக்கலாம் அல்லது பொருள்களை எடுத்துக்கொடுத்து சமையல்காரரை சமைக்கச் சொல்லலாம். ஆர்டர் செய்தும் சாப்பிடலாம். 

இத்துடன் நீங்கள் மீன் பிடித்ததையோ அல்லது சமைத்ததையோ இந்த ஹோட்டல் கொண்டாடவும் செய்கிறது. இது வித்தியாசமான புதுமையான அனுபவமாக உள்ளதாக இந்த ஹோட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் உணவகத்தின் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.