கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 205 யானைகள் மற்றும் பல வனவிலங்குகள் உயிரிந்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருகிறது.
இப்பகுதியில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கினாலும், கென்யாவின் வானிலை ஆய்வுத் துறை, வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பகுதிக்கு சராசரிக்கும் குறைவான மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இதனால் கென்யாவின் வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் முடிந்துவிடவில்லை என்ற அச்சம் ஏற்படுகிறது.
உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் இறந்துள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக மோசமான வறட்சியின் காரணமாக கென்ய வனவிலங்கு பாதுகாப்பில் இருந்த யானைகள் மற்றும் வரிக்குதிரைகள் உள்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள், 512 காட்டெருமைகள், 381 பொதுவான வரிக்குதிரைகள், 51 எருமைகள், 49 வரிக்குதிரைகள் மற்றும் 12 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கென்யாவின் சில பகுதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதிய தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், மக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: உதகையை மிரட்டும் புலிகள்: நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள்
கென்யா சுற்றுலாத்துறை தண்ணீர் இல்லாத பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.