
மத்திய சீனாவில் உள்ள தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரின் வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தின் தொழிற்சாலையில் திங்கள்கிழமை மாலை 4:22 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டது.
திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். சிறிய காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை சீராக இருப்பதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அவ்வை நடராசனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க. ஸ்டாலின்
இந்த விபத்து தொடர்புடைய சந்தேகப்படும் நபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.