
துருக்கியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா்.
தலைநகர் அங்கராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.0ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்தனா். எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து: 66 ஆண்டுகள் அகலாத சோகம்!
முன்னதாக, இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 268 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.