உலக நடப்புகளை துல்லியமாக கணித்துச் சொல்லி வரும் பாபா வங்காவின் உக்ரைன் மீதான ரஷியப் போர் தொடர்பான கணிப்பைக் கேட்டு ரஷிய போர் வீரர்களின் மனைவிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
உக்ரைனில் ஒரு ரஷிய வீரர் தனது மனைவியுடன் பேசும் விடியோ காலை, உக்ரைனின் புலனாய்வு அமைப்பு ஒன்று யூ டியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது.
இதையும் படிக்க | வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?
அந்த விடியோவில், இன்னும் சில காலத்துக்கு நாம் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்பதைச் சொல்லி கலங்குகிறார்கள். ரஷிய படையில் கொடுக்கும் உத்தரவுகளை செய்யாத வீரர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ராணுவ வீரர் மனைவியிடம் சொல்கிறார்.
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கூறியிருப்பது குறித்து அந்த மனைவி சொல்கிறார். அதாவது, உக்ரைன் மீதான போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று அவர் கணித்திருப்பதாவும், அதனால் நாம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சந்திக்க முடியாதா என்று கேட்டு அழுகிறார்.
இதற்கு முன்பு, இரட்டைக் கோபுர தாக்குதல், கரோனா பேரிடர் உள்ளிட்ட பல்வேறு உலக நடப்புகளை முன்பே கணித்துச் சொல்லியவர் பாபா வங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பாபா வங்கா?
வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா என்ற 81 வயதான கியூபா நாட்டைச் சேர்ந்த இவரை பாபா வங்கா என்றே இவரைத் பின்தொடர்வோர் அன்போடு அழைக்கிறார்கள்.
வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை இவர் அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவது வழக்கம்.
இரட்டைக் கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம், என அவர் இதுவரை வெளியிட்ட கணிப்புகளில் சுமார் 90 சதவீதம் துல்லியமாக நடந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார்கள் அவரது பின்தொடர்வோர்.
இவர் 12 வயதாக இருந்தபோது, புயலில் சிக்கி, கண்பார்வையை இழந்தவர். இவர் கண்பார்வையை இழந்த பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றதாகவும் கூறுகிறார்கள்.
அவர் இந்த ஆண்டுக்கான கணிப்புகளை மட்டுமல்ல, 5079 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஆறு கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் தெள்ளத்தெளிவான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அது என்ன 5079 ஆம் ஆண்டு வரை என்கிறீர்களா? அவரது கணிப்பின்படி, 5079ஆம் ஆண்டுதான் ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.
அதுபோல, இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்கள் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரித்து அதனால் நாட்டில் பற்றாக்குறை, பஞ்சம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.
இவர் வெளியிட்டிருக்கும் சில அதிசய கணிப்புகளில், 2028ஆம் ஆண்டு வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்கள் எனறும், 2046ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும், 2100ஆம் ஆண்டுக்குப் பிறகு செயற்கை சூரிய ஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே இருக்காது என்றும் கணித்துள்ளார்.