இந்தியாவும் சீனாவும்தான் நெருங்கிய நட்பு நாடுகள்: ரஷிய அதிபர் புதின்

இந்தியாவும் சீனாவும் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்று தெரிவித்த ரஷிய அதிபர் புதின், அவர்கள் எப்போதும் உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண வலியுறுத்துகின்றனர் என்றார்.
putin110015
putin110015



இந்தியாவும், சீனாவும் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்று தெரிவித்த ரஷிய அதிபர் விளாதமீர் புதீன், அவர்கள் எப்போதும் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகின்றனர் என கூறினார்.

ரஷியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிற்கு வந்திருந்த ரஷிய அதிபர் விளாதமீர் புதீன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், உச்சிமாநாட்டின் போது ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பல்வேறு ஆற்றல்மிக்க துறைகளில் ஒருவருக்கொருவர் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பேசினர்.

ஆசியாவின் இரண்டு பலம் கொண்ட நாடுகள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணுமாறு கூறி வருவகிறது. 

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகிறது. சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகிறது. 

"அவர்களின் கேள்விகள் மற்றும் கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சமநிலையான நிலைப்பாட்டை நாங்கள் அறிவோம். இவர்கள் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் மற்றும் அவர்களின் நிலையை நாங்கள் மதிக்கிறோம்," என்று புதீன் தெரிவித்தார்.

இந்தியா, சீனா நட்பு நாடுகளின் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடு நன்கு தெரியும் என்று புதீன் தெரிவித்தார். 

மேலும், உக்ரைனின் பல பகுதிகளில் பல நாள்கள் பலத்த குண்டுவீச்சுக்கு பின்னர், பலர் கொல்லப்பட்டனர், நியமிக்கப்பட்ட இலக்குகளில் பெரும்பாலானவை தாக்கப்பட்டதாகவும், உக்ரைன் மீது மேலும் தாக்குதல்கள் தேவையில்லை என்றும், உக்ரைனை அழிக்க விரும்பவில்லை என்றும் புதீன் தெரிவித்தார்.

கடந்த மாதம் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டின் போது, ​​உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமைதியான முறையில் தீர்க்க அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயகம், பேர்ச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், "இன்றைய காலகட்டம் போர்க்கான காலம் அல்ல என்றும், ஜனநாயகம், ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதுதான் உலகம் முழுவதும் சென்று சேரும் என்றும், வரும் நாள்களில் அமைதி நிலவும்" என்று நம்புவதாக மோடி புதினுடனான தனது முதல் சந்திப்பில் தெரிவித்தார்.  

உக்ரைனில் போர் தீவிரமடைந்தபோது புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி சீன அதிபர் ஜி ஜின்பிங், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினார். 

எஸ்சிஓ  உச்சிமாநாட்டின் போது, ​​ரஷிய அதிபர் புதினை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், உக்ரைனில் போர் குறித்து "கேள்விகள் மற்றும் கவலைகளை" எழுப்பினார். ரஷியாவின் நடவடிக்கை குறித்து சீனா கவலை தெரிவித்தது இதுவே முதல் முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com