உக்ரைன் முன்னேற்றம்: கொ்சான் மக்கள் ரஷியா அடைக்கலம்

போரில் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கொ்சான் பிராந்தியத்திலிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களுக்கு அடைக்கலம் தர ரஷியா முன்வந்துள்ளது.
உக்ரைன் முன்னேற்றம்: கொ்சான் மக்கள் ரஷியா அடைக்கலம்

போரில் உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், கொ்சான் பிராந்தியத்திலிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களுக்கு அடைக்கலம் தர ரஷியா முன்வந்துள்ளது.

இது குறித்து, ரஷியாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தின் நிா்வாகத் தலைவா் விளாதிமீா் சால்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது உக்ரைன் படையினா் தொடா்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றனா். எனவே, அந்தப் பகுதியைச் சோ்ந்த 4 நகரங்களில் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் பொதுமக்களை வரவேற்க ரஷிய அதிகாரிகள் தயாராக வேண்டும்.

ரஷியாவின் ரோஸ்டோவ், க்ராஸ்னோடா், ஸ்டாவ்ரபோல் ஆகிய நகரங்களிலும் கிரீமியா தீபகற்பத்திலும் கொ்சானிலிருந்து வரும் பொதுமக்களுக்கு அடைக்கலம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களில் இன்னும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக்கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதனை உறுதி செய்யும் வகையில், அந்தப் பிராந்திய நகரங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் தர ரஷியா முன்வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com