புலிட்சர் விருது பெறச் சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்

பிரபலம் வாய்ந்த புலிட்சர் விருதைப் பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது.
புலிட்சர் விருது பெறச் சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்

பிரபலம் வாய்ந்த புலிட்சர் விருதைப் பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது.

பத்திரிகை துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் விருது புலிட்சர். பத்திரிகை துறை மட்டுமல்லாது இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட துறைகளுக்கும் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 1917 ஆம் ஆண்டு முதல் இந்த விருதை கொலம்பியா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்தியாவில் கரோனா பேரிடர் சூழல் குறித்த புகைப்பட செய்திக்காக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சன்னா இர்ஷாத் மோத்தா எனும் பத்திரிகையாளருக்கு 2022ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த சன்னா இர்ஷாத் மோத்தா புலிட்சர் விருதுக்கு தேர்வானதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புலிட்சர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக சென்ற மட்டோமோத்தா தில்லி விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முறையான பாஸ்போர்ட் மற்றும் கடவுச்சீட்டு அவரிடம் இருந்த போதிலும் அவரின் அமெரிக்கப் பயணத்தை அதிகாரிகள் தடுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து ராய்ட்டஸ் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை பதிலளிக்கவில்லை என அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அப்பகுதிக்கு வருகை தருவதற்கும், அங்குள்ள பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் புத்தக வெளியீட்டு நிகழ்விற்காக பிரான்ஸ் செல்லவிருந்த மோத்தாவின் பயணத்தை இதே போன்று அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். தற்போது மீண்டும் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் மோத்தாவுடன் ஆப்கனில் தலிபான்களால் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கிற்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com