41 வருடங்களுக்கு பிறகு கேக் துண்டு ஏலம்: விலை எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் 1981 இல் இளவரசி டயானாவை மணந்தபோது, திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது.
41 வருடங்களுக்கு பிறகு கேக் துண்டு ஏலம்: விலை எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் 1981 இல் இளவரசி டயானாவை மணந்தபோது, திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது. விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41 ஆண்டுகளாக கேக் துண்டுகளை  பாதுகாப்பாக வைத்து இருந்தார்.

இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ. 27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது ஐந்து அடுக்குகள் மற்றும் ஐந்து அடி உயரமுள்ள கேக்கில் இருந்தது என்று கூறப்படுகிறது.

அந்த கேக்கானது, கேக் வாங்கப்பட்ட பெட்டியில் இருந்துள்ளது. அந்த பெட்டியில் சார்லஸ் கையால் எழுதப்பட்ட நன்றிக் குறிப்பும் உள்ளது.

அதில், "இவ்வளவு சிறந்த பயனுள்ள ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் இவ்வளவு சிரமத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும் என்று டயானாவும் நானும் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மேலும் எந்த வீட்டில் அந்த கேக் இறுதியாக உள்ளதோ அந்த வீட்டில் நாங்கள் அதை பொக்கிஷமாக வைப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்!" என்று எழதப்பட்டுள்ளது.

இதேபோல், சில நாள்களுக்கு முன்பு, ராணி எலிசபெத்தின் டீ பேக் ஆனது இபேயில் ரூ.9.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது. டீ பேக் ஆனது பயன்பாட்டிற்குப் வந்த பிறகு, வின்ட்சர் கோட்டையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com