சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம்!

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டனின் அடுத்த அரசரானார். 
சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம்!
சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம்!

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டனின் அடுத்த அரசரானார். 

இதையடுத்து, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனின் புதிய ராணியாகிறார் கமிலா. எனினும் சார்லஸ் மன்னரானாலும் கமிலா கன்சார்ட் இளவரசி என்றே அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

மறைந்த எலிசபெத் மகாராணி, இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் ஆவார். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ஆம் ஆண்டு மறைந்த பின்னர், 2-ஆம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 25.

அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. எலிசபெத் மகாராணி தான் பட்டத்துக்கு வந்ததின் 70-ஆவது ஆண்டு விழாவை சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் கொண்டாடினார்.

இவர் ராணி என்ற அந்தஸ்தில் பிரிட்டனில் 15 பிரதமர்களை பார்த்திருக்கிறார். இவர், பட்டத்துக்கு வந்த 70 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்திலேயே, எதிர்காலத்தில் ராணி பட்டம் யாருக்கு என்பதை அவர் கைகாட்டிவிட்டே சென்றிருக்கிறார்.

மகாராணி இது பற்றி குறிப்பிட்டிருந்ததாவது, "சார்லஸ் மன்னர் ஆகிறபோது ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்' என தெரிவித்திருந்தார். 

எனவே இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் மன்னர் பட்டம் ஏற்கிறபோது கமிலாவுக்கு ராணி பட்டம் தானாகவே வந்து சேரும். ஆனால், கமிலாவுக்கு என்ன பட்டம் வழங்கப்படும் என்பதுதான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் இருந்த விஷயம்.

சார்லஸ் பிரிட்டன் மன்னரானாலும் கமிலா கன்சார்ட் இளவரசி என்றே அழைக்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டன் வரலாற்றில் அரசா் அல்லது அரசியின் வாழ்க்கைத் துணைகளுக்கு அளிக்கப்படுவதுதான்‘கன்சாா்ட்’ என்ற அந்தஸ்து.

மறைந்த 2-ஆம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்கவே விருப்பம் என்று கூறிவிட்டதால் இனி அவர் ராணி பட்டம் பெறுவதில் பிரச்னை ஏதும் இருக்காது. இது மட்டுமின்றி, அவர் தனது விவேகம், தன்னடக்கம், கணவருக்கு உண்மையாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு நன்னடத்தைகளால் பிரிட்டன் மக்களின் ஏகோபித்த அன்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com