ராணி எலிசபெத்தின் உருவப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகள் செல்லுமா?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்


லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக பிரிட்டனில் அச்சாகும் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

வியாழக்கிழமை இரவு அவர் காலமான நிலையில், அந்த ரூபாய் நோட்டுகள் என்னவாகும்? உடனடியாக ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விகளுக்கு இல்லை என்றே பதில் வந்துள்ளது.

அதாவது, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டுகள் உடனடியாக மாற்றப்படாது என்றும், எலிசபெத் புகைப்படத்துக்கு மாற்றாக, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புகைப்படம் இடம்பெறும். ஆனால் அதுவும் உடனடியாக நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, எலிசபெத் உருவம் பொறித்த ரூபாய் மற்றும் நாணயங்கள் புழக்கதில்தான் இருக்கும். புதிய மன்னரின் புகைப்படம் அடங்கிய ரூபாய் போட்டுகள் வடிவமைக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டு மெல்ல புழக்கத்துக்குக் கொண்டு வரப்படும். ஒட்டுமொத்தமாக எலிசபெத்தின் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து முற்றிலும் இல்லாமல் போக பல ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com