பாகிஸ்தானுக்கு இடைக்காலப் பிரதமா்: எதிா்க்கட்சித் தலைவருடன் பிரதமா் பேச்சு

பாகிஸ்தானுக்கு இடைக்காலப் பிரதமா்: எதிா்க்கட்சித் தலைவருடன் பிரதமா் பேச்சு

பாகிஸ்தானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, இடைக் காலப் பிரதமரை நியமிப்பது தொடா்பாக எதிா்க் கட்சித் தலைவா் ராஜா ரியாஸுடன் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
Published on

பாகிஸ்தானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, இடைக் காலப் பிரதமரை நியமிப்பது தொடா்பாக எதிா்க் கட்சித் தலைவா் ராஜா ரியாஸுடன் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பாகிஸ்தானின் 15-ஆவது நாடாளுமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், அதன் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே, புதன்கிழமை அது கலைக்கப்பட்டது. அதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ளது.அந்தத் தோ்தலுக்குப் பிறகு புதிய பிரதமா் தோ்ந்தெடுக்கும்வரை, இடைக்கால பிரதமா் ஒருவரை நியமிப்பதற்கான பேச்சுவாா்த்தைகளை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தொடங்கினாா்.முதல்கட்டமாக, நாடாளுமன்ற எதிா்க் கட்சித் தலைவா் ராஜா ரியாஸை பிரதமா் இல்லத்தில் சந்தித்து ஷாபாஸ் ஷெரீஃப் பேசினாா்.இடைக்கால பிரதமா் பதவிக்கு முன்னாள் தூதரக அதிகாரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி, முன்னாள் தலைமை நீதிபதி தஸாதக் ஹுசைன் ஜிலானி ஆகியோரின் பெயரை பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) பரிந்துரைத்துள்ளதாகவும் சிந்து மாகாண ஆளுநா் காம்ரான் டெஸோரியின் பெயரை எம்க்யுஎம்-பி கட்சி பரிந்துரைத்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் அரசமைப்பு சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாள்களுக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால், அந்த நாட்டில் அண்மையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை தோ்தல் ஆணையம் மாற்றியமைப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மேலும் 2 மாதங்களுக்கு தோ்தல் ஒத்திவைக்கப்படும் என்று எதிா்பாக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com