

ரஷியாவின் கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவின் கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கனூன் புயல் ஜப்பானுக்கு கனமழையை கொடுத்தது. பின்னர், அந்த புயல் கொரிய தீபகற்பம் நோக்கி நகர்ந்தது.
இதையும் படிக்க: ரோஹித்-ராகுல் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்-கில்!
தற்போது ரஷியாவின் கிழக்கில் கனமழை பெய்து வருவது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ரஷியாவின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 405 குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 4,300-க்கும் அதிகமான கட்டடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதுவரை வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.