கிரீஸில் தொடரும் காட்டுத் தீ: தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள்!

கிரீஸ் நாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் 600-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிரீஸில் தொடரும் காட்டுத் தீ: தீயை கட்டுப்படுத்தும் பணியில் 600 தீயணைப்பு வீரர்கள்!

கிரீஸ் நாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் 600-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சில நாள்களாக அதிக அளவில் பரவி காடுகளை அழித்து வருகிறது. கிரீஸ் நாட்டை தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொளுந்து விட்டு எரியும் இந்த காட்டுத் தீயிற்கு இதுவரை 20  பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீ விபத்துகளில் இதுவும் ஓன்று. 

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறை சார்பில் கூறியதாவது: 7 விமானங்கள் மற்றும் 5 ஹெலிகாப்டர்களுடன் 295 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயினால் 77 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அழிவை சந்தித்துள்ளது. மற்ற இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 260-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 75 இடங்களில் சிறிது சிறிதாக பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்றனர்.

மின்னல் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com