இராக் : பொதுமக்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி!

இராக்கின் கிழக்கு டியாலா மாகாணத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாக்தாத் : இராக்கின் கிழக்கு டியாலா மாகாணத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு இராக்கின் டியாலா மாகாணத்தில் உள்ள முக்தாதியா பகுதியில் நேற்றிரவு (நவ.30) சில மர்மநபர்கள் குண்டுவெடிப்பு நடத்தியதோடு அங்கிருந்த பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். இந்த கொடூர தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தியாலா ஆளுநர் முத்தன்னா அல்-தமிமி, இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாக கூறியுள்ளார்.

இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ள டியாலா மாகாணத்தில், சன்னி மற்றும் சைட்ஸ் பிரிவினரிடையே அடிக்கடி கலவரம் ஏற்படும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com