நித்தியானந்தாவால் பதவி விலக நேர்ந்த அமெரிக்க அதிகாரி!

கைலாசாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையில் கைலாசாவின் பிரதிநிதிகள்
ஐக்கிய நாடுகள் அவையில் கைலாசாவின் பிரதிநிதிகள்

பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சரவையில் பணியாற்றிய அதிகாரி அர்னால்டோ சமோரா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணமாகச் சொல்லப்படுவது, நித்தியானந்தாவின் புனைவு தேசமான கைலாசாவோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வுக்குச் சமூக ஊடகங்களில் பகடியான பதிவுகள் வரத் தொடங்கிய பிறகே அந்நாடு கைலாசா குறித்து அறிந்து கொண்டுள்ளது.

சுயமாக அறிவித்துக் கொண்ட பிராந்தியம் என எதுவுமில்லாத கைலாசா ஒரு ஏமாற்றுவேலை என தென்னமெரிக்க நாடான பராகுவே உணர்ந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கைலாசா தேசத்தின் பிரதிநிதிகள், ஜெனீவா ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் இந்தாண்டு இரண்டு முறை பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் உள்ளனர்.

பதவி விலகிய அதிகாரி நேர்காணலில் பேசும்போது, தனக்கு கைலாஸா தேசம் எங்கிருக்கிறது என தெரியாது என்றும் பராகுவே நாட்டுக்கு நீர்ப்பாசனம் உள்பட பல்வேறு வகையில் அவர்கள் உதவுவதாகக் குறிப்பிட்டதால் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

கைலாசாவின் பிரதிநிதிகள் அங்குள்ள உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் பிரகடனங்கள் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளியான நித்தியானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

நெவார்க் சிட்டி ஹாலில் கைலாசாவை சகோதர தேசமாக அங்கீகரித்த நியூ ஜெர்ஸி மாகாணம், அதன் பிறகு கடந்த மார்ச்சில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com