கனடா திரையரங்குகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய பார்வையாளர்கள்!

ஹிந்தி படங்கள் திரையான திரையரங்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நுழைந்துள்ளனர்.
திரையரங்கம் | மாதிரி படம் (Pexels)
திரையரங்கம் | மாதிரி படம் (Pexels)
Published on
Updated on
1 min read

டொராண்டோ: கனடாவில் உள்ள யோர்க் வட்டாரப் பகுதிகள் மற்றும் டொரண்டோவில் மூன்று வெவ்வேறு இடங்களில் திரையரங்களில் இருந்து பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முகமறியாத நபர்கள், மர்ம பொருளைப் பார்வையாளர்கள்மீது தெளித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன் நகரத்தில் உள்ள திரையரங்கில் அப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்திருந்த இருவர், அறியப்படாத, எரிச்சலடையச் செய்யும் பொருள் ஒன்றை காற்றில் தெளித்துள்ளனர்.

அந்த அரங்கில் 200 பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். பலர், தெளிக்கப்பட்ட பொருளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஹிந்தி படங்கள் திரையிடப்பட்ட திரையரங்குகளில் இது நடந்துள்ளது. ஒரே போலான சம்பவம் இன்னும் இரண்டு திரையரங்கங்களிலும் நடந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா வெறுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com