வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2023, 9:15 am

DIN

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று (டிச.10) காலை 9.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

வறுமை மிகுந்து காணப்படும் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.