
மாஸ்கோவில் நடந்த சர்வதேச ஆடை அலங்கார அமைப்பின் நிகழ்வில்
பல்வேறு நாடுகளில் இருந்து வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
உக்ரைன் போர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நிகழ்வு, ரஷ்யா மேற்குலக நாடுகளில் இருந்து தன்னை விலகிக் கொள்வதைக் காட்டியுள்ளது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆடை அலங்கார கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு பிரிக்ஸ்+ எனப் பெயரிட்டுள்ள ரஷ்யா, உக்ரைனுடன் நடைபெற்றுவரும் போருக்கிடையில், தனது வெளியுறவு கொள்கைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து உறவை மேலும் விரிவாக்கி வருகிறது.
12 நாடுகளின் ஆடை வடிவமைப்பாளர்களும் 60 நாடுகளில் இருந்து தொழில்துறையினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: தீயணைப்புப் படை வீராங்கனைகளாக முதல்முறையாக பெண்கள்!
ரஷ்யாவின் புகழ்பெற்ற இடங்களான செஞ்சதுக்கத்துக்கு அருகில் உள்ள பூங்கா மற்றும் தேசிய நூலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.