போரை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்!

இஸ்ரேல், காஸாவில் தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் உடனடியாக நீண்ட கால போர் நிறுத்தத்தைத் தொடர பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
ரஃபா தாக்குதலில் காயப்பட்டோருக்கு உதவும் மக்கள் | AP
ரஃபா தாக்குதலில் காயப்பட்டோருக்கு உதவும் மக்கள் | AP

காஸா பகுதியில் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கும் முற்றிலும் விருப்பமில்லாத நிலையில், உடனடியாக நீண்ட கால போர் நிறுத்தத்தை தொடர பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. அதிக அளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக பிரான்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளது. 

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா காஸாவில் தொடர்ந்து வரும் தாக்குதல் குறித்த பிரான்ஸின் கவலையை இஸ்ரேலிடம் தெரிவித்தார். 

மேலும், ராஃபாவில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். இஸ்ரேலின் ராஃபா தாக்குதலில் பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

விரையில் இஸ்ரேல் அதிகாரிகள் இந்தத் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 18,800க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துவருகின்றன. இஸ்ரேல் உலக நாடுகளின் ஆதரவை இழக்க ஆரம்பித்திருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெல் அவிவில் இஸ்ரேல் அதிகாரிகளைச் சந்தித்து போர் காலத்தை வரையறுக்க வலியுறுத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com