திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

பெத்லகேம் கிறிஸ்துமஸ்... போர் நிறுத்தம் வேண்டும் பாலஸ்தீன சிறுமிகள்!

இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பாலஸ்தீன சிறுமிகள் ஊர்வலமாகச் சென்றனர்.  

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:31 pm

DIN

இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பாலஸ்தீன சிறுமிகள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.  

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசு பிறந்ததாக கருதப்படும் பெத்லகேம் அருகே நடைபெற்ற சிறுமிகளின் ஊர்வலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச. 25) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இஸ்ரேல் - காஸாவுக்கு இடையே போர் நடைபெற்று வரும் பாலஸ்தீனத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பாலஸ்தீன சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர். இயேசு கிறிஸ்து பிறந்த பூமியில் ஒற்றுமை, அமைதி திரும்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப்படும் பெத்லகேம் நகரம், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலுள்ள ஜெருசலேமுக்கு அருகில் அமைந்துள்ளது. 
 
இஸ்ரேல் - காஸாவின் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரின் காரணமாக இயேசு பிறந்த பாரம்பரிய இடத்தில் அதிகாரிகள் கொண்டாட்டங்களை கைவிட அறிவுறுத்தியிருந்தனர். எனினும், பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.