காஸாவில் மேலும் 3 ராணுவ வீரர்கள் பலி: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்துள்ளது.
காஸாவில் மேலும் 3 ராணுவ வீரர்கள் பலி: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

டெல் அவிவ்: வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலம், அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கிய தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 

பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த மோதலின் உச்சக்கட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் பிடித்துச் சென்றனா். அதயைடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 போ் உயிரிழந்தனா்; 382 போ் காயமடைந்தனா்.

இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20,915-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 54,918-க்கும் மேற்பட்டவா்கள்  காயமடைந்ததாகவும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்துள்ளது. இதையடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கிய தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய தரப்பில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 

இறந்த வீரர்கள் லெப்டினன்ட் யாரோன் எலியேசர் சிட்டிஸ் (23), கிவாட்டி படையணியில் உள்ள ஷேக்ட் பட்டாலியனின் துணைத் தளபதி மற்றும் ரானானா, ஸ்டாஃப் சார்ஜென்ட். பெட்டா டிக்வா மற்றும் ஸ்டாஃப் சார்ஜென்ட் பகுதியைச் சேர்ந்த கிவாட்டி படைப்பிரிவில் உள்ள ஷேக்ட் பட்டாலியனில் உள்ள சிப்பாய் இட்டாய் புடன் (20). கிவாடி படையணியில் உள்ள ஷேக்ட் பட்டாலியனில் நெவ் டேனியலைச் சேர்ந்த வீரர் எஃப்ரைம் யாச்மேன் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com