பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விமானத்தில், சன்னல் இல்லாத சன்னல் இருக்கைக்கு கூடுதல் தொகையா?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சன்னல் இருக்கைக்காக கூடுதல் தொகை வசூலித்தும், பயணி ஒருவருக்கு சன்னல் இல்லாத இருக்கையையே அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2023, 1:18 pm

DIN

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சன்னல் இருக்கைக்காக கூடுதல் தொகை வசூலித்தும், பயணி ஒருவருக்கு சன்னல் இல்லாத இருக்கையையே அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. 

இதனை அந்தப் பயணி புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில், கூடுதல் தொகைக்குரிய எனது சன்னல் இருக்கை எங்கே? என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். 

ரயில் அல்லது விமானத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சன்னல் இருக்கை விரும்புபவர்களாகவே இருப்பர். அதற்காக விமானங்களில் கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில், சன்னல் இருக்கைக்காக பயணி ஒருவர் கூடுதல் தொகை செலுத்தியுள்ளார். 

எனினும் பயணத்தின்போது அவருக்கு சன்னல் இல்லாத, சன்னல் இருக்கையே ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகை கொடுத்தும் சன்னல் இருக்கும் இருக்கை கிடைக்காததால், அவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தையும் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். 

அதில், அனிருத் மிட்டல் எனும் பயணி குறிப்பிட்டுள்ளதாவது, விமானம் தரையிறங்கும்போது கிடைக்கும் அழகான காட்சிக்காக என் வலதுபுற சன்னல் இருக்கைக்காக நான் கூடுதல் பணம் செலுத்தியிருந்தேன்.  எனது சன்னல் இருக்கை எங்கே? பிரிட்டிஷ் ஏர்வேஸ் எனப் பதிவிட்டுள்ளார். 

இதற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.