5 நாள்களாக தவித்த சிறுமி! உயிருடன் மீட்ட இந்திய வீரர்கள்!!

துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித்தவித்த 8 வயது சிறுமியை துருக்கி வீரர்களுடன், இந்திய மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) உயிருடன் மீட்டடனர். 
5 நாள்களாக தவித்த சிறுமி! உயிருடன் மீட்ட இந்திய வீரர்கள்!!

துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித்தவித்த 8 வயது சிறுமியை துருக்கி வீரர்களுடன், இந்திய மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) உயிருடன் மீட்டடனர். 

இடிபாடுகளிலிருந்து சிறுமியை மீட்கும் வீரர்களின் விடியோ பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள் கிழமை (பிப். 6) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் ஏராளமான நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியா சார்பில் மீட்புப் படையினர் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், துருக்கியின் நுர்டாகி பகுதியில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிறுமி சிக்கித் தவித்துள்ளார். அவரை துருக்கி வீரர்களுடன் சேர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடும் குளிருக்கு மத்தியில் கட்டட இடிபாடுகளில் சிக்கித்தவித்த சிறுமியை  உயிருடன் மீட்ட வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com