
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.22.20 உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில் ரூ.272-ஆகியிருக்கிறது.
அதிவேக டீசல் விலை ரூ.280, மண்ணெண்ணெய் ரூ.202.73, சாதாரண டீசல் ரூ.196.68 என உயா்த்தப்படுகிறது. சா்வதேச நிதியத்திடமிருந்து கடனுதவி பெறுவதற்காக, அந்த அமைப்பு விதித்துள்ள நிபந்தனையின் பேரில் இந்த முடிவை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.