‘போரைத் தொடங்கியது அவர்கள்தான்’: புதின் உரை

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஷிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீா் புதின்  இன்று உரையாற்றினார்.
‘போரைத் தொடங்கியது அவர்கள்தான்’: புதின் உரை

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஷிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் விளாதிமீா் புதின்  இன்று உரையாற்றினார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் கடைசியாக ரஷிய நாடாளுமன்றத்தில் புதின் உரையாற்றிய நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று உரையாற்றினார்.

ரஷிய அதிபர் புதின் பேசியதாவது, “நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், போரைத் தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம். அமைதியான முறையில் தீர்வு காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் வேறு விதமான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்.

உள்ளூர் மோதலை உலகளவில் வளர்க்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறார்கள். அதற்கேற்ப நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம்” எனத் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.

முன்னதாக, உக்ரைன் நாட்டிற்கு நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

ரஷியா - உக்ரைன் போர்

ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com