பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய செய்தியை திருத்தம் செய்யலாம்: விரைவில் வருகிறது புதிய வசதி

வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2023, 3:54 pm

DIN

வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். 

அதன்படி பயனர்களின் உபயோகத்திற்காக புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி தங்களது நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி  அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள்ளாக திருத்தம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதி சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.