3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் மண்டை ஓட்டைக் கொண்டு, அப்போதே மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on


இஸ்ரேலில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் மண்டை ஓட்டைக் கொண்டு, அப்போதே மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆதாரங்களை சேகரித்த தொல்லியல் துறையினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சிஎன்என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஒரு நபரின் மண்டை ஓடு, அதன் கீழே இருக்கும் திசுக்கள் சேதம் அடையாமல் உடைத்தெடுக்கப்பட்டிருப்பதை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

கிமு 1550 முதல் கிமு 1450 ஆண்டு காலத்துக்குள் இந்த சகோதரர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. டெல் மெகிடோவில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் இவர்களது உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

அதில், மூத்த சகோதரர் வயது 20 முதல் 40க்குள் இருக்கலாம். அவரது மண்டை ஓட்டில் மூளை அறுவைசிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதாவது, மண்டை ஓட்டில் ஒரு சதுரமான எலும்புப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் மிகக் கச்சிதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

ஒரு மனித எலும்புக் கூடு கிடைத்தால், அதன் வாழ்முறை மட்டுமே கண்டுபிடிக்க இயலும். ஆனால் இந்த மனித எலும்பு மூலம், ஒரு மிகப்பெரிய நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது என்கிறார்கள்.


புகைப்படம் : நன்றி journals.plos.org
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com