பணமதிப்பிழப்புக்கு இடையே அதிபரை தேர்வு செய்யும் நைஜீரியா

நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. எதிர்பார்த்ததைவிடவும் குறைவான வாக்குகள் பதிவாகும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணமதிப்பிழப்புக்கு இடையே அதிபரை தேர்வு செய்யும் நைஜீரியா


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பொருளாதார பிரச்னையை சந்தித்திருக்கும் நிலையில், நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. எதிர்பார்த்ததைவிடவும் குறைவான வாக்குகள் பதிவாகும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆப்ரிக்காவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி சனிக்கிழமை காலை நைஜீரியாவில் அதிபருக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

சில வாக்குப்பதிவு மையங்களுக்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் வராததாலும், சில இடங்களில் இணையதள சேவை கிடைக்காததாலும் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் நிலவியது.

மக்கள் பலரும் கையில் பணமில்லாததால் வாக்குச்சாவடிக்கு வருவதே சிக்கலாகியிருப்பதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்ரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார பலம் வாய்ந்த நாடான நைஜீரியாவில் நடைபெறும் வாக்குப்பதிவு பல தரப்பினராலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நைஜீரியா மிக முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடாகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com