அரசு நிகழ்ச்சியில் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்!

அரசு நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்த நிகழ்வை பதிவு செய்து அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்ற 6 ஊடகவியலாளர்கள் கைது
அரசு நிகழ்ச்சியில் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்!
Published on
Updated on
1 min read


சூடான்:  தெற்கு சூடான் அதிபர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்த நிகழ்வை பதிவு செய்து அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், 2011ஆம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டபோது அதிபர் எழுந்து நின்று மார்பில் கை வைத்தபடி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு சிறுநீர் வந்த நிலையில், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்று கொண்டிருந்ததால் நின்றபடியே தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தார். இது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அரசு ஊடகத்தின் கேமராக்களில் பதிவானது. ஆனால், அது அந்நாட்டு அரசு ஊடகங்களில் ஒளிபரப்பப்படவில்லை. 

இந்த நிலையில் சம்பவம் நடந்த பல நாள்களுக்கு பிறகு அதிபர் சல்வா கீர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த விடியோ பதிவு எப்படியோ வெளியே கசிந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை பார்த்த பலரும் அதிபரின் உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதனையடுத்து,  71 வயதான அதிபர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த தர்மசங்கடமான விடியோவை வெளிட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ‘தெற்கு சூடான் ஒலிபரப்புக் கழகத்தில்’ பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் 6 பேரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் மேலும் மிரட்டல் அல்லது கைது அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தென் சூடான் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் பேட்ரிக் ஓயெட், கைதுகள் கவலையளிக்கின்றன என்று கூறியுள்ளார்.

தெற்கு சூடான் பல ஆண்டுகளாக அரசியல் கொந்தளிப்பு, பசி, இயற்கை பேரழிவுகள் மற்றும் மிருகத்தனமான மோதல்களை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com