ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைனில் ரஷியப் படைகள் வெல்லும்: புதின்

உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப் படைகள் கண்டிப்பாக போரில் வெல்லும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

News image
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
Updated On :18 ஜனவரி 2023, 1:42 pm

DIN

உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப் படைகள் கண்டிப்பாக போரில் வெல்லும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Story image

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓராண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

சமீபமாக ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

Story image

கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ’உக்ரைனில் நுழைந்துள்ள ரஷியப்படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.