தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் ஹாங்காங்! 

ஹாங்காங்கில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஜனவரி 30 முதல் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஹாங்காங்கில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஜனவரி 30 முதல் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தி வந்தது. லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், மருத்துவமனைகள் அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாமிற்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது இந்த விதியிலிருந்து மக்களை விடுதலை செய்துள்ளது. புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 5 நாள்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து 2 நாள்களுக்குள் எதிர்மறை சோதனை செய்தவுடன் வெளியில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்தும் தளர்த்தியுள்ள நிலையில் முகக்கவசம் அணிவது மட்டும் தற்போது கரோனா கட்டுப்பாடாக நீடித்துள்ளது. 

இதுகுறித்து தலைமை நிர்வாகி ஜான் லீ கூறுகையில், 

நகரத்தின் அதிக தடுப்பூசி மற்றும் தொற்று விகிதங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுத்ததாகவும், வலுவான நோய் எதிர்ப்புத் தடையைப் பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார். 

ஹாங்காங் தற்போது இயல்பு நிலையை எட்டியுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சீனாவுடனான தனது எல்லையை மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் நகரின் தொற்றுநோய் நிலைமை மேலும் மோசமடையவில்லை. 

கடந்த இரண்டு வாரங்களில் ஹாங்காங்கின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,700இல் இருந்து தற்போது 3,800ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com