ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் நேற்று அறிவித்துள்ளார்.


ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் நேற்று அறிவித்துள்ளார்.
அதன்படி, ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும் மேலும் பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த புதிய கட்டுப்பாடு ட்விட்டர் பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் தங்களது ட்விட்டர் தளத்தில் மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே ட்விட்டர் தளம் நேற்று உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரம் திடீரென முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...