
ஹைய்தி நாட்டில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 42 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நாட்டில் ஏற்கெனவே வன்முறை, அரசியல் சரிவு மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள நகரங்களில் திடீரென பெய்த தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட தகவலில்,
கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் மாயமாகியுள்ளனர். மொத்தம் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,400 பேர் வீடுகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் பகுதியில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள லியோகனே நகரம் வெள்ளத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, தேசிய அவசரக்கால பேரிடர் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்ரி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.