
உக்ரைனில் கிரிவி ரஹி நகரத்தில் ரஷிய ஏவுகணை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தைக் கடந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகின்றது.
இதுதொடர்பாக ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி லைசாக் வெளியிட்ட டெலிகிராம் பதிவில்,
கிரிவி ரிஹ் மீது ரஷிய படைகளை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மக்களின் உடைமைகள் பெரிதளவில் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 19 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்பு மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இதில், அடுக்கு மாடிக் கட்டம் தாக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கிரிவி ரிஹில் பகுதியில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.