டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நேபாளத்தில் கனமழையினால் நிலச்சரிவு: 5 பேர் பலி; மேலும் 28 பேரைக் காணவில்லை

நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :19 ஜூன் 2023, 6:23 am

நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா, தப்லேஜங், பஞ்ச்தார் மற்றும் தன்குடா ஆகிய நான்கு மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. 

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதில், 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடி வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சங்குவாசபாவில் 21 பேரும் பஞ்சதாரில் 4 பேரும், தப்லேஜங் மாவட்டத்தில் 3 பேரும் சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.