ஐக்கிய அரபு நாடுகளிலுள்ள அஜ்மான் நகரில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை, கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
உடனடியாக, நடமாடும் காவல்துறை வாகனம், தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, தீ விபத்தில் பாதிப்புக்குள்ளான விவரங்களை பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
ஐக்கிய அரபு நகரங்களில் அண்மைக்காலமாக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உள்கட்டமைப்பு அமைச்சகம் புள்ளிவிவரத்தோடு கவலை தெரிவித்திருந்த மூன்றாவது நாளில் இந்த தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”இந்தியாவில் எந்த முதல்வரும் சிந்திக்காதது!” முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்த திருமா!

தோல் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் சோஸியேட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மீட்கப்படும் மண்ணின் மரபு
மனம் மயக்கும் மலைச்சிகரம்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

