பாகிஸ்தானில் நடைபெற்ற போலான் தற்கொலைப்படை தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
பலுசிஸ்தான் கான்ஸ்டாபுலரியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.
போலானின் காம்ப்ரி பாலம் பகுதிக்கு அருகில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. மேலும், காயமடைந்தவர்கள் தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்ததாகவும், மேலும் அப்பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
இதையும் படிக்க: மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல்!
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும், எனினும், விசாரணைக்குப் பிறகே முழுமையாக கண்டறிய முடியும் என்று கச்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மெஹ்மூத் நோட்ஜாய் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.