காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு: 15 பேர் பலி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு: 15 பேர் பலி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்ததால் அந்தப் பகுதி வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவர் கூறியதாவது: எனது கிராமத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்த 30-க்கும் அதிகமானோரை காணவில்லை. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பயமாக இருக்கிறது. கனமழையின் காரணத்தால் இரண்டு ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (மே 4) பெய்யத் தொடங்கிய இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலரது வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து விட்டது என்றார்.

மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் வசிக்கும் மக்களுக்கு இது போன்ற கனமழை பெரும் துயரத்தையே கொண்டுவந்து சேர்க்கின்றன. உகாண்டா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் கனமழை பெய்து வருகிறது. 

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ரவாண்டாவைச் சேர்ந்த 129 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com