ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு!

ஹிரோஷிமாவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு!

ஹிரோஷிமாவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்று(வெள்ளிக்கிழமை) சென்ற அவர், 

இப்பயணத்தின்போது, ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததன்பேரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார்.

இதனிடையே இன்று(சனிக்கிழமை) காலை ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மலர் தூவி மரியாதை. செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த ஜப்பான் வாழ் தமிழர்களுடன் உரையாடினார். 

தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தவும் ஜி20 தலைமைப் பொறுப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கூட்டாண்மையை வலுப்படுத்துவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுலா, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை,  உயர் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் விவாதங்கள் நடைபெற்றன. 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இன்று காலை ஒரு சிறந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-ஜப்பான் உறவை முழுமையாக மதிப்பாய்வு செய்தோம். மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமை மற்றும் ஜப்பானின் ஜி-7 தலைமை குறித்து விவாதித்தோம்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com