ட்விட்டரில் இனி  2 மணி நேர விடியோவை பதிவேற்றலாம்

மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி 2 மணி நேர விடியோக்களை பதிவேற்ற முடியும் என்று எலான் மஸ்க் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் இனி  2 மணி நேர விடியோவை பதிவேற்றலாம்

வாஷிங்டன்: மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி 2 மணி நேர விடியோக்களை பதிவேற்ற முடியும் என்று எலான் மஸ்க் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

முதலில் பணியாளர்களை குறைத்த மஸ்க் பிறகு 'ப்ளூ டிக்' உள்ளிட்ட கட்டண நடைமுறைகளையும் கொண்டு வந்தார்.

தற்போது ப்ளூ வெரிஃபைட் சந்தாதாரர்கள் இனி 2 மணி நேர விடியோ அதாவது 8 ஜிபி வரை பதிவேற்றலாம் என்று எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெக் போர்ட்டலான டெக் க்ரஞ்சின் கூற்றுப்படி, ட்விட்டர் அதன் கட்டண திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், முந்தைய 60 நிமிட வரம்பை இனி இரண்டு மணி நேரமாக விரிவுபடுத்தியுள்ளது.

எலான் மஸ்க் இந்த செய்தியை அறிவித்த உடனே, பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பயனர், 'ட்விட்டர் புதிய நெட்ஃபிக்ஸ்' என்று பதிவு செய்துள்ளார்.

மற்றொரு பயனர், 'மிகவும் அருமை! இது சாத்தியமாவதற்கு நன்றி என்றார்'.

'ட்வீட்யூபிற்கு வரவேற்கிறோம் என்று ஒரு பயனர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த அப்டேட் தற்போது ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com