இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்வதற்கான கடமையுள்ளது: ஆண்டனி பிளிங்கன்

இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்வதற்கான கடமையுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
ஆண்டனி பிளிங்கன்
ஆண்டனி பிளிங்கன்

இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்வதற்கான கடமையுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டார். டெல் அவிவில் இஸ்ரேல் அதிபரை ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.

அப்போது, காஸாவுடனான போரில் சிக்கிய மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை பெறுவதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில், தன்னைத்தானே தற்காத்துக் கொள்வதற்கான கடமை உள்ளதென்றும், இஸ்ரேலால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தினார். 

அக்.7ல் நடந்த தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் பார்க்க கொள்ள வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், லெபனானுடனான தனது எல்லையில் மோதல்கள் விரிவடையும் அச்சம் உள்ளதால், அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.

கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com