காஸாவில் ஒரு மாதத்தில் மட்டும் 10,000 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
காஸாவில் ஒரு மாதத்தில் மட்டும் 10,000 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது. அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

காஸாவில் வான்வழி, கடல் வழி தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், மருந்தகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் காஸாவில் பொதுமக்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மசூதிகள், அகதிகள் முகாம் என நியாயமின்றி தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் மீது ஐநா குற்றம் சாட்டியுள்ளது.  

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். அதாவது காஸாவில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாகக் அந்நாட்டு சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. 

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் ஆயுதத் தாக்குதலை இனப்படுகொலை என உலக நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என 9 நாடுகள் இஸ்ரேலிலிருந்து தங்களது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com