மெளன அஞ்சலி செலுத்திய இஸ்ரேலியர்கள்!

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
மெளன அஞ்சலி செலுத்தும் இஸ்ரேலியர்கள்
மெளன அஞ்சலி செலுத்தும் இஸ்ரேலியர்கள்
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் மீது கண்மூடித்தனமாக ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலியர்கள், தாக்குதலில் இறந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி நிகழ்வை இன்று (நவ.7) கடைப்பிடித்துள்ளனர்.

அக்.7 இஸ்ரேலியர்களின் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக கொண்டாட்டத்தில் நகரமே மூழ்கியிருந்த போது எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கியது ஹமாஸ் பயங்கரவாத குழு.

கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்
கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

அந்தத் தாக்குதலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 242 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர்.

தெற்கு இஸ்ரேலில் நடந்த 7 தாக்குதலில் 348 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நாளின் இழப்பை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலேம் நகரங்களில் இந்த ஒரு மாத நினைவு இரங்கல் கூட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com