காஸாவில் 3 நாள்கள் போர் நிறுத்தம்?
காஸாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காஸாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் 3 நாள்கள் போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | வடக்கு காஸாவிலிருந்து மேலும் ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம்

ஹமாஸிடம் உள்ள 10-15 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதையடுத்து அதற்கு பதிலாக காஸாவில் 3 நாள்களுக்கு மட்டும் போரை நிறுத்திவைக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
மேலும் காஸாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் அவை, அரசு சாரா அமைப்புகள் இணைந்து காஸாவிற்கு எவ்வாறு, எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...