பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின்படி, பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின்படி, பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில்  10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

இந்த நடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.31 மணியளவில் 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது. 

இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்த நடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com