விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹமாஸின் திட்டம் என்ன? : வைரலாகும் இஸ்ரேல் விடியோ!

அல்-ஷிபா மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ஹமாஸின் திட்டத்தை விளக்கியுள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை.

News image
Updated On :21 நவம்பர் 2023, 10:42 am

இஸ்ரேல்- ஹமாஸ் போர் 47-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையைச் சுற்றி நடந்த தாக்குதல் மருத்துவமனைக்குள்ளும் தொடர்ந்தது.

வார இறுதியில், இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்றியது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹமாஸ் குழுவால் இஸ்ரேலில் இருந்து கடத்தி வரப்பட்ட பிணைக்கைதிகள் அல்-ஷிபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அந்த விடியோவில் ஹமாஸின் திட்டத்தை இஸ்ரேல் விளக்கியுள்ளது.

அக்-7 இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

மேலும், 240 பிணைக்கைதிகளை அவர்கள் கடத்திச் சென்றனர். காஸாவில் பல்வேறு மருத்துவமனைகள் இருக்கும்போது அல்-ஷிபா மருத்துவமனைக்குக்கொண்டு வரக் காரணம் ஹமாஸின் சுரங்க வலைபின்னலின் மையமாக அல்-ஷிபா மருத்துவமனை இருப்பதே என்கிறது விடியோ. 

அங்கிருந்து ஹமாஸால் எளிதாக பிணைக்கைதிகளை இடமாற்ற இயலும் என்பதற்காகவே அல்-ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தினர் என விளக்கமளித்துள்ளது, இஸ்ரேல் பாதுகாப்பு படை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.