சிங்கப்பூர்: நூதன திருட்டில் ஈடுபட்ட இந்திய மாணவர்களுக்கு சிறை!

சிங்கப்பூரில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாதிரி படம்
மாதிரி படம்

சிங்கப்பூரில் உள்ள யூனிக்ளோ சில்லறை விற்பனை கடையொன்றில் இந்திய மாணவர்கள் நான்கு பேர் 1,00,000 ரூபாய் மதிப்பு கொண்ட பொருள்களைத் திருடியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை நிலையத்தில் விலை குறிக்கும் டேக்குகளை நீக்கிவிட்டு, வெளியே கண்காணிக்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க இவர்கள் முயற்சித்துள்ளனர். 

திருடிய பொருள்களைச் சுயமாக வாடிக்கையாளர்கள் பில் செய்யும் இடத்தில் தங்களிடம் இருந்த பைகளில் அவசரமாக வைத்ததைக் கவனித்த பாதுகாவலர் ரசீது கேட்டபோது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். 

ரிதம், ஸ்மித், மிலன் மற்றும் ருசி சஞ்சய்குமார் ஆகிய நால்வருக்கு இந்தக் குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 65 நாள்களுக்கும் மற்ற மூவருக்கும் 40 நாள்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இவர்கள் சிங்கப்பூரில் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகிறார்கள். ஒரே அறையில் வசிக்கிறார்கள்.

இதே போல நான்கு நாள்கள் முன்பும் ஒரு திருட்டு நடைபெற்றுள்ளது. அதில் ஈடுபட்ட மூவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

அந்தக் குழுவில் இருந்த பாவிக் என்பவரின் கட்டாயத்தின் பேரில்தான் தாங்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

தாங்கள் தங்கியிருக்கும் அறையின் வாடகைத் தொகையை ஏற்றிவிடுவதாகவும் இல்லையெனில் அறையை விட்டு வெளியேற செய்வதாகவும் பாவிக் மிரட்டியதால் தாங்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல இரண்டு மாணவிகளும் இதே போல திருட்டில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டுள்ளனர். 

பாவிக் உள்பட நால்வர் முன்பே சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை நவ.30-க்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com