இந்தியர்களுக்கு மரண தண்டனை: மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கத்தார் நீதிமன்றம்!

கத்தாரில் உளவுக் குற்றச்சாட்டில் 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கத்தாரில் உளவுக் குற்றச்சாட்டில் 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

கத்தாா் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும் ‘அல் தாரா’ என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 போ், அந்நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா். 

இந்த வழக்கில் கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் புரேந்து திவாரி, கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தாா் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பு குறித்து அதிா்ச்சியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்தது. மேலும், 8 பேரின் குடும்பத்தினரையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். 

தொடர்ந்து இந்தியா சார்பில் 8 பேரின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தற்போது கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com